வணக்கம், சோபகிருது தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை மாதம், ஏப்ரல் 14ம் 2024 தேதியில் பிறக்கிறது. சூரியன் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகி அதனுடன் உச்சமும் அடைகிறார். சூரியன், ராகு மற்றும் புதன் பகவான் இணைவுடன் இந்த சித்திரை மாதம் தொடங்குகிறது.
இனி ராசியின் அடிப்படையில் பொதுவான சித்திரை மாத பலன்களை காணலாம்.
மேஷ ராசி – சூரிய பகவான் உச்சம் பெறக்கூடிய சித்திரை மாதத்தில், தொழில் ரீதியாக சாதகமான பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கும் மற்றும் குடும்ப உறவுகள் வலுப்படும்.
ரிஷப ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், உங்கள் பணியிடத்தில், ஆரோக்கியத்தில் மற்றும் நிதி சார்ந்த கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
இதனால் வருமானம் குறைய வாய்ப்புள்ளது. உறவுகள் இடையே அனுசரித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற செலவுகள் அதிகம் ஏற்படக்கூடிய மாதம் என்பதால் பணப்புழக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது.
மிதுன ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில் இதனுடன் புதாதித்திய சேர்க்கை ஏற்படுகிறது. இதனல் உங்களுக்கு அதிஷ்டம் வீடு தேடி வரும். உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் மற்றும் நல்ல வாய்ப்புகளைப் கிடைக்க பெறுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான காலம் ஆகும் மற்றும் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். வெளிநாடு வேலை மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும்.
கடக ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செய்யும் தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். நிதி சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டு வேலை, கல்வி மற்றும் காதல் சார்ந்த விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணம் சேமிக்க கூடிய மாதமாக அமையும்.
சிம்ம ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், இதனுடன் புதாதித்திய சேர்க்கை மற்றும் பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் இருக்கும், இது ஒரு சிறப்பான மாதமாக மேல் கட்டி கூறலாம். தொழிலில் முன்னேற்றம், பதவியில் உயர்வு மற்றும் நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் போன்ற சாதக நிலை தொடரும். திருமண அமைப்பு மற்றும் குடும்ப வாழ்க்கையில் மன நிறைவு கிடைக்கும்.
கன்னி ராசி – சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெறக்கூடிய நிலையில், பணியிடத்தில் சில சங்கடங்களைச் மற்றும் வேலை தொடர்பான தவறுகளால் பிரச்னைகள் ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளது. செலவுகள் உங்கள் கையை மீறி போகவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் பொதுவாக வயிறு தொடர்பான பிரச்சனைகள் கூடுதல் கவனம் தேவை. காதல் உறவும் சாதகமாக இல்லை. இந்த மாதம் முழுவதும் அதிக கவனம் தேவை.
துலாம் ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், தொழில் மற்றும் வேலை ரீதியாக சூழல் சாதகமற்றதாக மற்றும் அழுத்தமான இருக்கும். பல உடல் பிரச்சினைகளும் மற்றும் தேவையற்ற பயணங்களையும் தரும். அதிக பண செலவு, துணையின் ஆரோக்கிய குறைபாடு மற்றும் குடும்பத்தில் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த மாதம் முழுவதும் அனைத்து விதத்திலும் அதிக கவனம் தேவை.
விருச்சிக ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், இந்த அமைப்பு நல்ல முன்னேற்றம் தருவதாக இருக்கும் மற்றும் எடுக்கும் முயற்சிகளில் அனைத்தும் மிகவும் சாதகமானதாக இருக்கும். அனைத்து கடின உழைப்பிற்கும் பாராட்டு மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வெற்றியுடன் நல்ல பண வரவுக்கு வாய்ப்புள்ளது. உங்கள் மன
வாழ்க்கையும் மிகவும் உற்சாகமாக இருக்கும்.
தனுசு ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், இதனுடன் புதாதித்திய சேர்க்கை மற்றும் பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் இருக்கும் இந்த அமைப்பு சிறந்த அமைப்பு ஆகும். தாயாரின் உடல்நலம் சீராக அமையும். தொழிலில் முன்னேற்றம், பதவியில் உயர்வு மற்றும் நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் போன்ற சாதக நிலை தொடரும். குழந்தை பாக்கியம் தள்ளி போனவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் உங்களுக்கு குதூகலமான மாதமே.
மகர ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், இது ஒரு சிறப்பான மாதமாக அமைய வாய்ப்புகள் குறைவு. இதனால் உங்களின் சுகங்கள், வசதிகள் பாதிக்கப்படும். அலைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் நிதி நிலை ஏற்ற இறக்கத்தால் மன நிம்மதி குறைய வாய்ப்புள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் குடுமத்திரனார் ஒத்துழைப்பு பெரியளவில் கிடைக்காமல் போகலாம். இந்த மாதம் வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
கும்ப ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். அசாத்திய தைரியம் கூடும். இரண்டு வருமானம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். கண் மற்றும் உஷ்ணம் சம்பந்தமான விஷயங்களில் சற்று கவனமாக இருங்கள். திருமணம் கைக்கூடி வரும் மற்றும் நீங்கள் எடுத்த காரியம் உங்களுக்கு வெற்றியாக அமையும். இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் உங்களுக்கு ஒரு வெற்றியின் மாதமே.
மீன ராசி- சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், இந்த அமைப்பு ஒரு சாதகமற்ற நிலையாக உள்ளது. அதிக பண செலவு, ஆரோக்கிய குறைபாடு மற்றும் குடும்பத்தில் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதி விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவது மிகவும் நல்லது. உடல் நலம் தொடர்பாக அதிக பணம் செலவிட வேண்டியது இருக்கும். தொழிலில் முன்னேற்றம், பதவியில் உயர்வு போன்றவை தள்ளி போகலாம். பொறுமை முக்கியம். இந்த மாதம் முழுவதும் அனைத்து விதத்திலும் அதிக கவனம் தேவை.